‘மனுசன் எதுக்குள்ள இருக்காரு பாத்தீங்களா.’. பொறியில் சிக்கிய ‘எலி’ மாதிரி வசமாக மாட்டிக்கொண்ட நபர்.. நாமக்கலில் நடந்த ருசிகரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏடிஎம்-ல் திருட முயன்று நபர் ஒருவர் இயந்திரத்துக்குள் வசமாக சிக்கிய சம்பவம் நாமக்கலில் நடந்துள்ளது.

நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் இந்தியா ஒன் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு அப்பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ஏடிஎம் அறையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் வாகனத்தை நிறுத்திவிட்டு உடனே அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது நபர் ஒருவர் ஏடிஎம்-ல் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதற்காக இயந்திரத்தின் பின்பக்கத்தை உடைத்துக் கொண்டு இருந்துள்ளார். சரியாக போலீசார் உள்ளே சென்றதும், பொறியில் சிக்கிய எலி போல தலையை வெளியே நீட்டியுள்ளார். அங்கிருந்து ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் முழித்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனை அடுத்து அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திர ராய் என்பது தெரியவந்துள்ளது. மோகனூர் அருகே பரளியில் உள்ள தனியார் கோழி தீவின ஆலையில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு வேளையில் ஆள்நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றுள்ளார். இதனை அடுத்து உபேந்திர ராய் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
