VIDEO: எந்தவொரு திருடனும் இப்படி மாட்டியிருக்க மாட்டான்.. கார் கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. ‘வேறலெவல்’ ட்விஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்காரில் சென்றவரிடம் பணத்தை திருடி சிக்கிய திருடனின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

நெட்டிசன் ஒருவர் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் காரில் இருந்த நபர் சாலையோரம் உள்ள ஒரு கடையில் பொருளை வாங்கிவிட்டு பணம் கொடுப்பதற்காக கையை வெளியே நீட்டியுள்ளார். அப்போது முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு அந்த காருக்கு பின்னால் மர்மநபர் ஒருவர் அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருந்துள்ளார்.
இந்த சமயத்தில் கார் டிரைவர் காரை மெதுவாக முன்னோக்கி நகர்த்தவே, வேகமாக ஓடிவந்த அந்த நபர் காரில் உட்கார்ந்த நபரின் கையில் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு வேகமாக ஓடியுள்ளார். அப்போது அருகில் இருந்த இரண்டு பேர் அவரை லாவகமாக மடக்கிப் பிடித்தனர்.
இதனை அடுத்து தான் மிகப்பெரிய ட்விஸ்ட் தெரியவந்துள்ளது. அந்த காரில் இருந்து ஒரு போலீஸ் அதிகாரி இறங்கி வெளியே வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த திருடனை பிடித்த அவர், காருக்குள் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார். இதனை குறிப்பிட்டு ‘ரொம்ப நேரம் ஆப்பு எங்கே இருக்குன்னு தேடி.. கரெக்டா அது மேலேயே போய் உட்கார்ந்திருக்கான்’ என நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மற்றொருவர் ‘எதிரிக்குக் கூட இந்த நிலைமை வரக்கூடாது’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
ரொம்ப நேரம் ஆப்பு எங்க இருக்குன்னு தேடி... கரெக்ட்டா அது மேல போய் உக்காந்திருக்கான்... :/ pic.twitter.com/4Edcfks99T
— மலடா அண்ணாமல 2.O (@MeetShivaG) January 16, 2022
இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. பலரும் இது பிராங்க் வீடியோ என்றும், சினிமா சூட்டிங் போன்று உள்ளது என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
