வித்தியாசமா இருக்கே.. இதுதான் அகமதாபாத் அணியின் புது பெயரா..? கசிந்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அகமதாபாத் அணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Captain Hardik Pandya IPL franchise new name Ahmedabad Titans: Reports Captain Hardik Pandya IPL franchise new name Ahmedabad Titans: Reports](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/captain-hardik-pandya-ipl-franchise-new-name-ahmedabad-titans-reports.jpg)
ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான வேலைகளில் பிசிசிஐ மும்முறமாக ஈடுபட்டு வருகிறது. வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளன. அதனால் மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளனர். ஒவ்வொரு வீரர்களும் எந்தெந்த அணியால் எடுக்கப்பட உள்ளனர் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இதனிடையே அகமதாபாத், லக்னோ ஆகிய புதிய 2 அணிகள் இந்த ஆண்டு முதல் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் லக்னோ அணியின் கேப்டனாக இந்திய அணியின் இளம் வீரர் கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகிய 2 வீரர்களையும் வாங்கியுள்ளது. சமீபத்தில் அந்த அணிக்கு லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் என பெயர் வைத்துள்ளது.
இந்த நிலையில் மற்றொரு அணியான அகமதாபாத், தனது அணியின் பெயரை அகமதாபாத் டைடன்ஸ் என வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)