பட்டப்பகலில் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள்.. துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.1 கோடி கொள்ளை
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை: நிதி நிறுவனத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ரூ.1 கோடியை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஊழியருடன் ஏற்பட்ட ரகசிய உறவு.. வேலையை இழந்த உலகின் முன்னணி செய்தி நிறுவனத்தின் தலைமை அதிகாரி
மும்பையை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் அசால்டாக கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கொள்ளையர்கள் முன்பு போன்று கத்தி, மாஸ்க்கோடு வருவதில்லை. ஏதாவதொரு நிறுவனம் அல்லது வங்கியை நோட்டமிட்டு துப்பாக்கிகளோடு உள்ளே நுழைந்து பணம், நகைகளை கொள்ளையடித்து செல்கின்றனர். இதுபோன்ற செயலால் மக்கள் வெளியே செல்லவும் தயங்குகின்றனர். அந்த வகையில் தனியார் நிறுவனத்தில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பை முளுந் பகுதியில் உள்ள பாஞ்ச் ரஸ்டா என்ற இடத்தில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வட்டிக்கு கொடுப்பது வாங்குவது என எப்போதும் அங்கு பணம் புழக்கம் அதிகாமக இருக்கும் என தெரிகிறது. இதனை கடந்த ஒரு மாதகாலமாக கொள்ளையர்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், அந்த நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த 4 பேர் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டும், கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டும் அங்கிருந்தவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அவர்கள் அங்கு பணியாற்றிய நபர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி பணத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு மிரட்டினர். இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கொள்ளையர்கள் அனைவரும் கையில் துப்பாக்கி வைத்திருந்ததால் உயிர் பயத்தில் அவர்கள் கூறியபடி,1 கோடி ரூபாயை எடுத்துச் சென்றனர். கண்மூடி திறப்பதற்குள் பட்டப்பகலில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொள்ளை குறித்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்பு சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை குறித்து கூறிய மவுளண்ட் போலீசார் "அந்த நிதி நிறுவனத்திற்குள் நேற்று மாலை 3.30 மணியளவில் முகக்கவசம்(மாஸ்க்) அணிந்த கும்பல் ஒன்று வந்தது. அந்த கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டி நிதி நிறுவனத்தில் இருந்த பணத்தை தரும்படி நிதி நிறுவன ஊழியர்களிடம் கேட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்று தெரிவித்தது. மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
