‘200 நாட்கள் கழித்து சென்னையில் பெய்த மழை..’ பிரபல கிரிக்கெட் வீரரின் ஹேப்பி ட்வீட்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 20, 2019 05:14 PM

கடும் வெயில் மற்றும் அனல் காற்றால் சிரமப்பட்டு வந்த சென்னைவாசிகளை இன்று பெய்யத் தொடங்கியுள்ள மழை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

weather report chennai receives its first rain in 200 days

கடந்த ஆண்டு பொய்த்துப்போன பருவ மழையால் சென்னை கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. பல இடங்களில் குடிநீருக்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது, ஐடி ஊழியர்களை வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கச் சொல்வது , ஓட்டல்கள் தொடர்ந்து மூடப்படுவது, அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் காலி செய்து சொந்த ஊருக்குச் செல்வது எனப் பல இன்னல்களைச் சந்தித்து வந்தனர் சென்னைவாசிகள்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 200 நாட்களுக்குப் பிறகு சென்னையில் இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியுள்ளது. 21ஆம் தேதி முதல் சென்னையில் மழை பெய்யத் தொடங்கும், பின்னர் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும் என வானிலை மையம் கூறியிருந்த  நிலையில் ஒரு நாள் முன்னதாகவே சென்னையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

பெய்யத் தொடங்கியுள்ள மழையை சென்னைவாசிகள் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் மழை தூறும் வீடியோவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

Tags : #WEATHER #RAIN #CHENNAI