'இப்டி பண்ணுவான்னு கனவுல கூட நெனைச்சு பாக்கல'.. 'புள்ளைங்கள விட்டுட்டாளே’.. கதறிய கணவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 21, 2019 05:06 PM

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கூலி வேலை பார்த்து வரும் ஏழுமலையின் மனைவி காத்தாயி என்பவரும், காத்தாயியின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து வேலைபார்த்துவரும் பாபு என்கிற கொத்தனாரும், தகாத உறவில் இருந்ததாக ஒரு கட்டத்தில் ஏழுமலைக்கு சந்தேகம் எழுந்தது.

Chennai Woman married woman hanged with her affair

இதனால் பாபுவின் வீட்டுக்குச் செல்லக் கூடாது என்று ஏழுமலை, தன் மனைவியை எச்சரிட்துள்ளார். இதேபோல் பாபுவிடமும், தன் மனைவியிடம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக் கூடாது என்று தீர்க்கமாகக் கூறியுள்ளார். ஆனாலும், ஏழுமலைக்குத் தெரியாமல், காத்தாயி பாபுவின் வீட்டுக்குச் செல்வதும், வருவதுமாக இருந்துள்ளார்.

இதையறிந்த ஏழுமலை மீண்டும் காத்தாயியினை கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறுக்கு பின் வீட்டிற்கு ஏழுமலை வந்தபோது, அங்கு காத்தாயியினைக் காணவில்லை. இதனால் காத்தாயியைத் தேடிக்கொண்டு ஏழுமலை பாபுவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போதுதான், காத்தாயியும் பாபுவும் ஒரே அறையில் ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெரியவந்துள்ளது.

ஏழுமலை- காத்தாயி தம்பதியினருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்க, ஏற்கனவே திருமணமாகிய பாபுவுக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  கனவில் கூட, தன் மனைவி காத்தாயி இவ்வாறு செய்வார் என்று தான் நினைத்துப் பார்க்கவில்லை என்றும் இரு பிள்ளைகளை விட்டுவிட்டு போய்விட்டார் என்றும் ஏழுமலை புலம்பியுள்ளார்.

Tags : #SUICIDEATTEMPT #CHENNAI