அமிதாப்பின் ‘அட்வைஸில்’... அரசியல் குறித்து மட்டும்’... ‘ரஜினிகாந்த்’ பகிர்ந்த சூசக தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 17, 2019 11:36 AM

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வழங்கிய ஆலோசனைகளில் அரசியல் குறித்த ஆலோசனையை மட்டும் தன்னால் பின்பற்ற முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

rajinikanth speech about politics in darbar trailer release

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி  உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், தனக்கு கூறிய 3 முக்கியமான அறிவுரைகளை பற்றி பத்திரிகையாளர்கள் முன்பு பகிர்ந்து கொண்டார். 

அது என்னவென்றால், 60 வயதுக்குப் பிறகு இந்த 3 விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். முதலாவது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இரண்டாவது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் பரபரப்பாக இருக்க வேண்டும். எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும். காலையிலேயே வீட்டை விட்டு புறப்பட்டு விட வேண்டும்.

மூன்றாவது அரசியலில் நுழையக் கூடாது என அறிவுரை வழங்கினார். ஆனால் என்னால் முதல் இரண்டை மட்டுமே கடைப்பிடிக்க முடிந்தது. இதில் சில தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக மூன்றாவது விஷயத்தை மட்டும் என்னால் கடைப்பிடிக்க முடியவில்லை என்று ரஜினிகாந்த் மனம் திறந்து வெளிப்படையாக கூறினார்.

Tags : #RAJINIKANTH #AMITHABH #POLITICS