'தமிழக மக்கள் என் மேல வெச்ச நம்பிக்கை.. அது'.. தர்பார் விழாவில் 'தெறிக்கவிட்ட' ரஜினி பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 08, 2019 11:32 AM
அண்மையில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்ற தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியவைதான் இணையதளங்களில் வெகுவாக பரவி வருகின்றன.
இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த் தமிழக அரசின் மீது தமக்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் கூட நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்காக அனுமதியை அளித்ததற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இயக்குநர் பாலச்சந்தர் மற்றும் தயாரிப்பாளர்கள் தன் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்று கூறிய ரஜினிகாந்த் அதேபோல் தமிழக மக்களும் ரசிகர்களும் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது என்றும் குறிப்பிட்டுள்ளார். கடும் உழைப்பு, திறமை, சாணக்கியத்தனம், சகிப்புத்தன்மை எல்லாவற்றையும் பொறுத்துதான் வெற்றி அமையும் என்று பேசிய ரஜினிகாந்த் அன்புதான் பிரதானமானது என்பதை வழக்கம்போல் தனது குட்டிக்கதை மூலம் விளக்கினார்.
முன்னதாக பேசிய நடிகர் விவேக், ‘தூத்துக்குடி கலவரத்தின்போது காயம்பட்டு ஒருவர் மருத்துவமனையில் இருந்தார். அந்த இளைஞரை ரஜினிகாந்த் சென்று நேரில் சந்தித்த போது, அந்த இளைஞர் ரஜினிகாந்தை பார்த்து. “நீங்க யார்” என்று கேட்டார் அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் எவ்வளவு கோபம் வந்திருக்கும்? ஆனால் அந்த இடத்தில், “நான்தான்பா ரஜினிகாந்த்” என்று சொன்னாரே.. அதுதான் ரஜினி சார்’ என்று புகழாரம் சூட்டினார்.