"இனிய நண்பர் ஸ்டாலினுக்கு"... அட்வான்ஸாக தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Feb 28, 2023 05:19 PM

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருப்பவர் முக ஸ்டாலின். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகன் ஆவார். மேலும், முதல்வர் ஸ்டாலின் மார்ச் 1 ஆம் தேதியன்று பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

Rajinikanth birhday wishes to TamilNadu CM Mk stalin

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | சாப்பாடு விஷயத்துல வந்த சண்டை.. தண்ணி எடுத்து அண்ணன் முகத்தில் ஊற்றியதால் ஜெயிலுக்கு போன தம்பி.. பரபர பின்னணி!!

திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து தமிழக மக்களுக்காக உழைத்து வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சராக பதவியேற்று இருந்தார்.

தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை நேரடியாக களத்தில் இறங்கி தீர்வு செய்வதில் முதல்வர் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார்.

Rajinikanth birhday wishes to TamilNadu CM Mk stalin

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, நாளை (01.03.2023) தனது பிறந்த நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கொண்டாட இருக்கும் சூழலில் தற்போது முதலே சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரு நாள் முன்பாகவே அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Rajinikanth birhday wishes to TamilNadu CM Mk stalin

Images are subject to © copyright to their respective owners.

இது தொடர்பாக ரஜினிகாந்த் பேசி இருக்கும் வீடியோவில், "என்னுடைய இனிய நண்பர், மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டுமென்று அவருடைய 70 ஆவது பிறந்த நாளில் நான் மனதார வாழ்த்துகிறேன், நன்றி" என பேசி உள்ளார்.

Also Read | "மனைவி வெச்ச மீன் குழம்பு ஃபேவ்ரைட்.. அப்றம்"... முதல்வர் ஸ்டாலின் சொல்லும் டயட் சீக்ரெட்ஸ்.. EXCLUSIVE

Tags : #RAJINIKANTH #MKSTALIN #CM MK STALIN #RAJINIKANTH BIRHDAY WISHES TO CM MK STALIN #TAMILNADU CM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajinikanth birhday wishes to TamilNadu CM Mk stalin | Tamil Nadu News.