"மனைவி வெச்ச மீன் குழம்பு ஃபேவ்ரைட்.. அப்றம்"... முதல்வர் ஸ்டாலின் சொல்லும் டயட் சீக்ரெட்ஸ்.. EXCLUSIVE
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருப்பவர் முக ஸ்டாலின். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகன் ஆவார். மேலும், முதல்வர் ஸ்டாலின் மார்ச் 1 ஆம் தேதியன்று பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து தமிழக மக்களுக்காக உழைத்து வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சராக பதவியேற்று இருந்தார்.
தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை நேரடியாக களத்தில் இறங்கி தீர்வு செய்வதில் முதல்வர் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார்.
இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார். தனது பள்ளிக்காலம் குறித்தும், திருமணம் குறித்தும் நிறைய கருத்துக்களையும் அவர் சுவாரஸ்யத்துடன் பகிர்ந்திருந்தார்.
அப்போது தனது மனைவியின் சமையல் குறித்தும் தனக்கு பிடித்தமான உணவுகள் குறித்தும் பேசி இந்த முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்கா வைக்கும் மீன் குழம்பு தலைவர் கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமானது என்றும் குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து பேசிய முக ஸ்டாலின், "நான் வீட்ல வந்து நான் வெஜ் அந்த அளவுக்கு விரும்ப மாட்டேன். சைவம் தான் ரொம்ப விரும்பி சாப்பிடுவேன். அதுக்கு காரணம் என்னன்னா வெளியூருக்கு நான் அதிகம் போகும் போது அதிக நேரம் கண் விழிக்க வேண்டியது இருக்கும். அப்ப அசைவம் சாப்பிட்டா வயிறு அப்செட் ஆகிடும். அதனால பெரும்பாலும் நான்வெஜ் அவாய்ட் பண்ணிடுவேன். ஆனா வீட்ல மனைவி மீன் குழம்பு செஞ்சாங்கன்னா அதை மட்டும் விரும்பி சாப்பிடுவது உண்டு" என தெரிவித்தார்.
அதே போல தனக்கு அசைவம் மற்றும் சைவ உணவு வகைகளில் பிடித்த உணவு வகைகள் குறித்தும் தன்னுடைய டயட் பற்றியும் பேசி இருந்தார் முக ஸ்டாலின். "சைவத்துல சாம்பார், தயிர் சாதம், முட்டை கோஸ் பொரியல், பீட்ரூட். இந்த மாதிரி எல்லாம் சைவத்துல சாப்பிடுவேன். அசைவத்துல பொறுத்த வரைக்கும் நம்பர் ஒன் மீன் குழம்பு, அதுக்கப்புறம் சிக்கன்.
அதே மாதிரி என்னோட டயட் விஷயத்துல வைரமுத்து ஒரு கவிதை ஒன்னு சொன்னாரு. பசியோட உக்காரு, பசியோட எந்திச்சுருன்னு. அது மாதிரி தான் நான் பசியோட உட்காருவேன், பசியோட எந்திரிச்சிடுவேன். வயிறு முட்ட அதிகமா எல்லாம் சாப்பிடணும்னு கிடையாது. டைம்க்கு ஏத்த மாதிரி சாப்பிட்டு அந்த மாதிரி இருந்திருவேன். அதனால தான் உடலை இந்த அளவுக்கு ஆரோக்கியமா, நல்லபடியா மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கேன்" என தெரிவித்தார்.