ஒரே நாளில் இரண்டு துக்கம்.. நண்பர் & நெருங்கிய உறவினர் மரணத்தால் கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வர் ஸ்டாலினின் நெருக்கமான நண்பரும், நெருங்கிய உறவினரும் ஒரே நாளில் இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.
நடிகர் இயக்குனர் டி.பி. கஜேந்திரன் இன்று காலை உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். T. P. கஜேந்திரன் பழம்பெரும் நடிகை டி.பி.முத்துலட்சுமியின் மகன் ஆவார்.
சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று அதிகாலை டி.பி.கஜேந்திரன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. இயக்குனர் கஜேந்திரன், முதல்வர் ஸ்டாலினின் கல்லூரி கால நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று காலை, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதி மரணம் அடைந்தார். துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி என்ற சகோதரிகளும், ராஜ் மூர்த்தி என்ற சகோதரரும் உண்டு. இந்நிலையில் துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி (62) உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளது துர்கா ஸ்டாலின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எழும்பூரில் உள்ள அவரது வீட்டில் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஒரே நாளில் முதல்வர் ஸ்டாலினின் நெருக்கமானவர்கள் மரணம் அடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
