முதல்வர் ஸ்டாலின் சென்ற ரயில் பாதியில் நிறுத்தம்.. அபாய சங்கிலியை பெண் இழுத்ததால் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Feb 03, 2023 12:48 PM

முதல்வர் ஸ்டாலின் பயணித்த ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சற்று நேரத்தில் ரயில் மீண்டும் இயக்கப்பட்டிருக்கிறது.

The Train carrying Chief Minister MK Stalin stopped in midway

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஒரு உயிர் வரபோற நேரத்துல".. கர்ப்பிணி பெண், கணவர் பயணித்த காரில்.. திடீரென நடந்த அசம்பாவிதம்!!

தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வேலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அரசு அதிகாரிகளை சந்தித்து நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர், வேலூர், சத்துவாச்சாரி, சி.எம்.சி. காலனியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மைய சமையல் கூடத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து வேலூரில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று மாலை சென்னைக்கு ஸ்டாலின் புறப்பட்டார். கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வர் முக. ஸ்டாலின் பயணம் செய்தார். இந்த விரைவு ரயில் திருவலம் - முகுந்தராயபுரம் இடையே பயணித்துக் கொண்டிருந்த போது பெண் பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்திருக்கிறார்.

The Train carrying Chief Minister MK Stalin stopped in midway

Images are subject to © copyright to their respective owners.

இதனால் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. முதல்வர் சென்ற ரயில் பாதியில் நிறுத்தப்பட்டதால் அந்தப் பகுதியை பரபரப்பாக காணப்பட்டது. இதனையடுத்து ரயில் நின்றதற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது உடைமைகளை மேலே வைக்கும் போது தவறுதலாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஏழு நிமிட காலதாமதத்திற்கு பிறகு ரயில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு தனது பயணத்தை தொடர்ந்து இருக்கிறது.

The Train carrying Chief Minister MK Stalin stopped in midway

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பெண்ணுக்கு ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கின்றனர். முதல்வர் முக. ஸ்டாலின் பயணித்த ரயில் பாதியிலேயே நின்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது

Also Read | கிளி பார்த்த வேலை.. உரிமையாளருக்கு ₹74 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்.. விநோத பின்னணி..!

Tags : #MKSTALIN #DMK #CM MK STALIN #TRAIN #MIDWAY #STOP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The Train carrying Chief Minister MK Stalin stopped in midway | Tamil Nadu News.