முதல்வர் முக ஸ்டாலினுக்கு சிறுமி கொடுத்த பரிசு.. பின்னர் தெரியவந்த நெகிழ்ச்சி காரணம்..!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வர் முக ஸ்டாலினுக்கு சிறுமி ஒருவர் பேனாவை பரிசாக அளித்திருக்கிறார். அதனை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட முதல்வர் சிறுமி கூறியதை கேட்டு நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.
தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வேலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அரசு அதிகாரிகளை சந்தித்து நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர், வேலூர், சத்துவாச்சாரி, சி.எம்.சி. காலனியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மைய சமையல் கூடத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Images are subject to © copyright to their respective owners.
அதன்பின்னர் அருகில் இருந்த ஆதி திராவிடர் நலப் பள்ளிக்கு சென்ற முதல்வர் அங்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை உண்டு தரத்தினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு உணவு பறிமாறினார். தொடர்ந்து தலைமை ஆசிரியர், உணவு தயாரிக்கும் குழுவினரிடம் பேசிய முதல்வர் மாணவர்களுக்கு சத்தான மற்றும் தரமான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து அவர் கிளம்பும்போது சிறுமி ஒருவர் அவரது காரின் அருகே ஓடிவர, அங்கிருந்த காவலர்களை சிறுமியை தன்னிடத்தில் வரவிடும்படி கூறியிருக்கிறார். அப்போது, அந்த சிறுமி பேனா ஒன்றை முதல்வருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். எதற்காக இந்த பேனா? என முதல்வர் கேட்டதற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்கும்படி அந்த சிறுமி கூறியிருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனால் நெகிழ்சியடைந்த முதல்வர் சிறுமியிடமிருந்து பேனாவை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டதுடன் நன்கு படிக்கும்படியும் அறிவுரை கூறிவிட்டு சென்றிருக்கிறார். இந்நிலையில் முதலமைச்சரை சந்தித்து பேனாவை கொடுத்த யாழினி என்ற 4 ஆம் வகுப்பு சிறுமி முதல்வருக்கு பரிசளித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
Also Read | செல்ல நாய்க்கு வளைகாப்பு.. 9 வகையான சாப்பாடுடன் விருந்து.. மொய்ப்பணம் வைத்து வாழ்த்திய உறவினர்கள்..!

மற்ற செய்திகள்
