உதயநிதியா? செந்தாமரையா?.. யாரு செல்லப்பிள்ளை..😍 முதல்வர் MK ஸ்டாலின் அசத்தல் பதில்.. EXCLUSIVE

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Feb 27, 2023 07:09 PM

திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் தம்முடைய 70 ஆவது பிறந்த நாளை வரும் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடுகிறார்.

MK Stalin about udhayanidhi stalin and senthamarai

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சிறந்த பெண் கோமாளி".. குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை.. செஃப் வெங்கடேஷ் பட்டின் எமோஷனல் கமெண்ட்!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வராக இருந்த திமுக மூத்த தலைவர் கலைஞர். மு.கருணாநிதியின் மகன் ஆவார். கலைஞரின் மறைவுக்கு பின், திமுக கட்சிக்காக செயல்பட்டு வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

தொடர்ந்து மக்கள் குறித்த பல பிரச்சனைகளில் நேரடியாக களத்தில் இறங்கி அதனை சரி செய்வதிலும் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார்.

MK Stalin about udhayanidhi stalin and senthamarai

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அதே போல, அவரது கேள்விகளுக்கு அசாத்திய பதில்களை அளித்து அனைவரையும் அசர வைத்துள்ளார் முக ஸ்டாலின். மேலும் அரசியல் தாண்டி தனது பெர்சனல் விஷயங்கள் பலவற்றையும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பகிர்ந்து கொண்டார்.

MK Stalin about udhayanidhi stalin and senthamarai

அப்படி இருக்கையில், சற்று Complicated ஆன கேள்வி ஒன்றை கோபிநாத் முன் வைத்தார். "அடுத்து ஒரு இன்ட்ரஸ்டிங்கான கேள்வி. உதயநிதியா? செந்தாமரையா?. யார் ஸ்டாலினுக்கு ரொம்ப நெருக்கம்?. யாரு செல்லப்புள்ள?. ஏன்னா அப்பாக்களுக்கு பெரும்பாலும் பொம்பள புள்ளைங்கனா ரொம்ப பிடிக்கும் அப்படின்னு எல்லாம் சொல்லுவாங்க?" என தெரிவிக்கிறார்.

இதற்கு பதில் சொல்லும் முதல்வர் ஸ்டாலின், "இந்த கண்ணு முக்கியமா, இந்த கண்ணு முக்கியமா என கேக்குற மாதிரி இருக்கு" என தனது இரண்டு கண்களையும் குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "நான் அந்த வேறுபாடு பார்க்கிறது இல்லை. ரெண்டு பேருமே என் மேல் அன்பு வச்சிருக்காங்க. எதுவா இருந்தாலும் என்னை கேட்காமல் எதுவும் செய்றதில்ல. 

Also Read | "ஒரு மாசம் அதை நெனச்சு அழுதேன்".. சிக்கித் தவித்த இஷாந்த்.. தோனி, தவான் செய்த விஷயம்.. நெகிழ்ச்சி பின்னணி!!

Tags : #MKSTALIN #UDHAYANIDHI STALIN #SENTHAMARAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MK Stalin about udhayanidhi stalin and senthamarai | Tamil Nadu News.