சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் நடத்தும் நலத்திட்ட விழாவின் பெயரை வெளியிட்டு உருக்கமாக பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 03, 2023 07:54 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் நடத்தும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் பெயரை அறிவித்திருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Raghava Lawrence shares video Welfare programme by rajini fans

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வைர மூக்குத்திகளை திருடிச்சென்ற மர்ம நபர்.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அதன்பிறகு வெற்றிப் படிக்கட்டில் பயணிக்க துவங்கிய ரஜினிகாந்த் தற்போது இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக அறியப்படுகிறார்.  ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படமான ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

ரசிகர்களின் ஏற்பாடு

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் சார்பாக அவ்வப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், அவருடைய ரசிகர்கள் அடுத்த நல உதவித் திட்டத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழா குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையில், இந்த திட்டத்தின் பெயர் மற்றும் லோகோ ஆகியவற்றை நடிகரும் நடன இயக்குனரும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

வீடியோ

ராகவா லாரன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் பேசும் அவர்,"தலைவரின் ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடும் இந்த விழா மனதிற்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தலைப்பு 'மனிதம் காத்து மகிழ்வோம்'. அவருக்கே உண்டான தலைப்பு இது. அவருடைய வாழ்க்கையில் அவர் செய்த சிறிய உதவியினால் வந்தவன் நான்.

Images are subject to © copyright to their respective owners.

இப்போது கூட இப்போது கூட தலைவர் வீட்டிற்கு வருவதாக போன் செய்துவிட்டு அவரை காக்க வைக்க கூடாது என்பதற்காக 15 நிமிடங்களுக்கு முன்கூட்டியே சென்றாலும் வாசலில் எனக்காக காத்திருப்பார். என்னைப் பொருத்தவரையில் அவரை மகான், குரு என்று தான் சொல்லுவேன். நான் அவரிடம் பேசி போனை வைக்கும் போதெல்லாம் குருவே சரணம் என்றுதான் சொல்வேன். அவரைப் பற்றி ஏதாவது ட்வீட் செய்தால் குருவே சரணம் என்றுதான் குறிப்பிடுவேன். இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றியடைய வேண்டும் என ரசிகர்களில் ஒருவனாக தலைவர் வணங்கும் ராகவேந்திரா சாமியை வேண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | தாய்லாந்து : பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றி பதுங்கியிருந்த கடத்தல் மன்னன்.. ரகசிய தகவலால் அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

Tags : #RAJINIKANTH #RAGHAVA LAWRENCE #WELFARE PROGRAMME #RAJINI FANS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Raghava Lawrence shares video Welfare programme by rajini fans | Tamil Nadu News.