மாலத்தீவில் மிருணாளினி ரவி.. மத்த பாட்டுக்கு ஆடி தான பாத்துருக்கீங்க.. அவங்க பாட்டுக்கே ஆடி பாத்ததில்லையே! இதோ பாருங்க 😍

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Pichaimuthu M | Mar 03, 2023 04:51 PM

பிரபல தமிழ் சினிமா நடிகை,  மிருணாளினி ரவி டிரெண்டிங் பாட்டுக்கு மாலத்தீவில் நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mirnalini Ravi Dancing Her Enemy Movie Tum Tum Song

Images are subject to © copyright to their respective owners.

Also Read | விடுதலை - 1 படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா.. எப்போ? வெற்றிமாறன் கொடுத்த  அப்டேட்!

ENEMY

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கிய திரைப்படம் 'எனிமி'. இந்த படத்தில் விஷால் மற்றும் ஆர்யா  சேர்ந்து நடித்தனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்தனர். 

'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்திருந்தார். இசையமைப்பாளராக தமனும், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகரும், கலை இயக்குனராக டி.ராமலிங்கமும் பணிபுரிந்தனர்.‌

Mirnalini Ravi Dancing Her Enemy Movie Tum Tum Song

Images are subject to © copyright to their respective owners.

இந்த திரைப்படம், 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

டும் டும்

இந்த படத்தில் இடம்பெற்ற டும் டும் பாடல் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமன் இசையில் அமைந்த இந்த திருமண கொண்டாட்ட பாடல், தற்போது உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகி வருகிறது.

Mirnalini Ravi Dancing Her Enemy Movie Tum Tum Song

Images are subject to © copyright to their respective owners.

பிரபலங்கள் பலர் இந்த பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஆக வெளியிட்டு வருகின்றனர். தமன் இசையில் விவேகா பாடல் வரிகளில் இந்த பாடல் அமைந்துள்ளது.

மாலத்தீவில் டும் டும்

இந்நிலையில் இந்த படத்தில் நடித்து இந்த டும் டும் பாடலுக்கு நடனம் ஆடிய மிருணாளினி ரவி, தற்போது மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவில் இருந்து டும் டும் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Mirnalini Ravi Dancing Her Enemy Movie Tum Tum Song

Images are subject to © copyright to their respective owners.

மிருணாளினி ரவியின் டப்மாஷ்

நடிகை மிருணாளினி, ஏற்கனவே தமிழில் சூப்பர் டீலக்ஸ், எனிமி, சாம்பியன், எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Mirnalini Ravi Dancing Her Enemy Movie Tum Tum Song

Images are subject to © copyright to their respective owners.

இவர் டிக் டாக், டப்மாஷ் போன்ற இணைய பயன்பாட்டு மென்பொருள்களில் வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கோப்ரா படத்தில் ஜென்னி எனும் கதாபாத்திரத்தில் நடிகை மிருணாளினி ரவி நடித்திருந்தார்.

Also Read | பூஜா ஹெக்டேயின் வெறித்தனமான பாக்ஸிங் பயிற்சி.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் போட்டோஸ்

Tags : #MIRNALINI RAVI #MIRNALINI RAVI DANCE TUM TUM SONG #ENEMY MOVIE

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mirnalini Ravi Dancing Her Enemy Movie Tum Tum Song | Tamil Nadu News.