'யூடியூப் பார்த்து சமைக்கிற காலம் போய் இப்போ...' 'இதெல்லாம் கூட பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டாங்க...' - அதிர்ச்சியில் உறைந்த போலீசார்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டையை சேர்ந்த இரு இளைஞர்கள் யூடியூபை பார்த்து துப்பாக்கி தாயார் செய்து போலீசில் சிக்கியுள்ளனர்.

சமூக ஊடகங்கள் வழியாக பலர் தங்களின் திறமைகளை வெளிக்காட்டியும், தங்களுக்கு தேவையானவற்றையும் கற்று வருகின்றனர். இவற்றுள் சிலர் சமூக ஊடகங்களை தவறான முறையில் கையாண்டு வருவதையும் நாம் செய்திகளில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் யூடியூபை பார்த்து துப்பாக்கி தயார் செய்ததாக காவல்துறையினர் இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் உடையநேரி காலனி பகுதியில் வசிக்கும் சிவா(19) மற்றும் மாரிமுத்து (21) என்ற இரு இளைஞர்களின் வீட்டிலிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியையும், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய இரும்பு குழாய் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கணேஷ் நகர் போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் மூலம் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையிலான போலீசார் உடையநேரி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தான் சிவா மற்றும் மாரிமுத்து ஆகியோர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணையில், துப்பாக்கி தயாரிப்பது எப்படி என யூடியூபில் பார்த்து பயிற்சி பெற்று, பின் விற்பனைக்காக துப்பாக்கியை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
