ஊரடங்கால் ‘இந்த’ கடை எல்லாம் திறக்கல.. யூடியூப் பார்த்து சென்னை ‘ஐடி’ ஊழியர் செஞ்ச காரியம்.. கையும் களவுமாக பிடிச்ச போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் யூடியூப் பார்த்து மதுபானம் தயாரித்த ஐடி ஊழியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையை அடுத்த சின்ன நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் ராகுல் (22). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் வினோத் ராஜ் (26). இவர் மார்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இருவருக்கும் மதுபழக்கம் உள்ளதாக தெரிகிறது.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபான கடைகள் அனைத்தும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மது கிடைக்காததால் இருவரும் யூடியூப் பார்த்து வீட்டில் மதுபானம் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி திராட்சை, நாட்டு சர்க்கரை, பட்டை இலை மற்றும் சில பொருட்களை அரைத்து மதுபானம் தயாரிக்க முயன்றுள்ளனர்.
இதுகுறித்த தகவலறிந்த நீலாங்கரை போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மதுபானம் தயாரித்துக்கொண்டிருந்த ஐடி ஊழியர் ராகுல் மற்றும் அவரது நண்பர் வினோத் ராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கால் மது கிடைக்காததால் ஐடி ஊழியார் யூடியூப் பார்த்து மதுபானம் தயாரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
