‘டிக்டாக்கிற்கு போட்டியாக களமிறங்கும் யூடியூப்’.. வெளியான அசத்தல் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Apr 04, 2020 12:23 PM

டிக் டாக் செயலிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

YouTube reportedly working on TikTok competitor called Shorts

சீனாவின் பைட் டான்ஸ் என்ற நிறுவனம் டிக் டாக் செயலியை உருவாக்கியுள்ளது. இதில் பிரபலமான படத்தின் பாடல்கள், வசனங்களுக்கு பயனர்கள் பாடியும், நடனமாடியும் பகிர்ந்து வருகின்றனர். இதை மெருகேற்ற கூடுதலான எஃபெக்ட்டுகளை சேர்க்கவும் வசிதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதுவரை பல நிறுவனங்கள் டிக் டாக் செயலிக்கு போட்டியாக புது செயலிகளை கொண்டுவர முயன்று வெற்றி பெற முடியவில்லை.

ஃபேஸ்புக் நிறுவனம் லாஸோ என்ற செயலியை கொண்டு வந்தது. ஆனால் இந்த செயலி பற்றி பலருக்கு இன்னமும் தெரியவில்லை. டிக் டாக்கின் சில அம்சங்களை இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட்டும் கொண்டுவர முயன்றன. இதனை பைன் என்ற பிரபல செயலியை உருவாக்கியவர்களில் ஒருவர் பைட் என்ற செயலியை உருவாக்கி அறிமுகம் செய்தார். ஆனால் அது இன்னும் பரவலாகவில்லை. கடந்த 12 மாதங்களில் ஆப்பிள் மற்றும் ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட தளங்களில் இருந்து டிக் டாக் செயலியை 84.2 கோடி முறைக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், உலகம் முழுக்க, சீனாவை தவிர்த்தே தினமும் 4.1 கோடி மக்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் டிக் டாக்கிற்கு போட்டியாக ஷார்ட்ஸ் என்ற புதிய அம்சத்தை யூடியூப்பில் கொண்டுவர கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிக் டாக் போன்று தனி செயலியாக இல்லாமல், யூடியூப் மொபைல் செயலியிலேயே இந்த ஷார்ட்ஸ் வசதி கொடுக்கப்படும். மேலும் யூடியூப்பில் உரிமம் பெற்ற பாடல்கள் அதிகம் இருப்பதால் அது ஷார்ட்ஸுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.