VIDEO: 'PRIVATE' MODE-ல் ஒளித்து வைக்கப்பட்டிருந்த '500 வீடியோக்கள்'!.. மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!.. 'கறுப்பர் கூட்டம்' பகீர் பின்னணி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jul 21, 2020 01:11 PM

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய 500 வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

karuppar koottam videos removed youtube channel tnpolice ccb ban

கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செந்தில் பாஸ்கர், சுரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், திநகரில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்தை சோதனை செய்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். போலீசில் தாங்கள் பதிவேற்றம் செய்த கந்த சஷ்டி கவசம் குறித்த ஆபாச பரப்புரை வீடியோக்களை நீக்கிவிட்டதாக சுரேந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது சர்ச்சைக்குரிய வீடியோக்களை அட்மின் மட்டுமே பார்க்கும்படியாக பிரைவேட் செய்து வைத்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் 500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே சுரேந்திரன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை வரும் எனத் தெரிகிறது. மேலும், சுரேந்திரனை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனலை ஒட்டு மொத்தமாக முடக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் யுடியூப் நிறுவனத்திற்கு மெயில் அனுப்பி உள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karuppar koottam videos removed youtube channel tnpolice ccb ban | Tamil Nadu News.