"அந்த மாதிரி அறிகுறியே இல்ல... இது கண்டிப்பாக"... 'சுஷாந்த் மரண வழக்கில்'... 'எய்ம்ஸ் குழுவின் பரபரப்பு ரிப்போர்ட்!!!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாசுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த எய்ம்ஸ் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்திய சூழலில், இந்த மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் டாக்டர் சுதிர்குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்து, சிபிஐயிடம் தன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள சுதிர்குப்தா, "நாங்கள் எங்களுடைய இறுதி அறிக்கையை அளித்துவிட்டோம். சுஷாந்த் சிங் மரணம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஏற்பட்டதுதான். தூக்கு போட்டதை தவிர அவருடைய உடலில் எந்த காயமும் இல்லை. உடல் மற்றும் ஆடையில் போராடியதற்கான அல்லது சண்டையிட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மும்பை தடயவியல் அறிவியல் அறிக்கையிலும், எய்ம்ஸ் நச்சுயியல் ஆய்வகத்தின் ஆய்விலும், கழுத்தில் தூக்கு போட்டதற்கான அடையாளம் மட்டுமே சுஷாந்த் உடலில் இருந்தது வேறு எதுவும் இல்லை" எனக் கூறியுள்ளதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.