'கொஞ்ச நாளாவே எங்க போச்சுன்னு தெரியல...' 'காட்டுப்பக்கம் போனப்போ, அங்க...' 'அலங்காநல்லூரையே அதிர வச்ச 'ராவணன்' காளைய இப்படியா பார்க்கணும்...' - கதறி துடித்த மக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டத்தில் வீறு கொண்டு சுற்றிவந்த ராவணன் என்ற ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், நெம்மேலி பட்டியைச் சேர்ந்தவர் காவல்துறை துணை ஆய்வாளர் அனுராதா. இவர் தன் அண்ணனுடன், ராவணன் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார்.
ராவணன் காளை கடந்தாண்டு அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளையர்களை திணறடித்து முதல் பரிசு பெற்று வெற்றிகளை குவித்தது.
மாடு பிடி வீரர்களின் சிம்ம சொப்பனமாக இருந்த இந்த காளைக்கு ஒன்பது வயது ஆகிறது. இந்நிலையில் கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற ராவணன் காளை வீரர்களை திணறடித்து பிடிபடாமல் ஓடியது. அந்த விளையாட்டின் போதிருந்தே ராவணன் ஜல்லிக்கட்டு காளையை காணவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
மேலும் பல இடங்களில் தேடியும் ராவணன் காளை கிடைக்கவில்லை. இந்தநிலையில் ராவணன் காளை தச்சன்குறிச்சி அருகே நிற்பதாக மாரிமுத்துவுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தச்சன்குறிச்சி சென்று காளையைத் தேடிய போது, காட்டுப்பகுதியில் பாம்பு புற்றுக்கு அருகில் காலை இறந்த நிலையில் கிடந்ததுள்ளது.
ராவணன் காளை பாம்பு கடித்த வடுவூம் காணப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பாம்பு கடித்த ஆத்திரத்தில் பாம்பு புற்றையும் ராவணன் காளை முட்டி மோதி சேதப்படுத்தியும் உள்ளது.
அதன்பின் ராவணனை லாரியில் ஏற்றி ஊர்வலமாக தங்கள் சொந்த ஊரான நெம்மேலி பட்டிக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்துள்ளனர். இராவணன் காளை இறந்த உடலைப் பார்த்து ஊர் மக்களும் சுற்றுவட்டார மக்களும் கதறி அழுதுள்ளனர்.
அங்குள்ள ஜல்லிக்கட்டு வீரர்களும் ராவணன் காளையின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வழியனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
