தமிழகத்தில் 'ஜல்லிக்கட்டு' போட்டிகள் நடைபெறுமா??... 'தமிழக' அரசு வெளியிட்ட 'முக்கிய' அறிவிப்பு!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று அச்சுறுத்தலின் காரணமாக, நாடு முழுவதும் கடந்த ஓராண்டாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு நிகழ்ச்சிகளில் 300 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. எருது விடும் நிகழ்ச்சிகளில் 150 வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் கோவிட் 19 தொற்று இல்லை என்ற சான்று பெற்றிருக்க வேண்டும்.
திறந்த வெளியின் அளவுக்கு ஏற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். நிகழ்ச்சியில் பார்வையாளராக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.' என தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் தை திருநாளான பொங்கல் தினத்தன்று மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
