'திடீரென கருப்புப்பட்டையுடன் கோசம் போட்ட மாடுபிடி வீரர்கள்'... பரபரப்பான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கருப்புப்பட்டை அணிந்து மாடு பிடி வீரர்கள் கோசம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்குத் துவங்கிய இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 420 வீரர்கள் அவற்றை அடக்கப் பாய்ந்தனர். காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டின்போது திடீரென இரண்டு மாடுபிடி வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் போலீசார் உடனடியாக அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர்.
இதனால் சிறிது நேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
Tamil Nadu: Two bull tamers detained by police for waving black flags and shouting slogans against Centre's farm laws during #Jallikattu event in Madurai pic.twitter.com/AE1ItcEpwk
— ANI (@ANI) January 14, 2021