'இப்போ தான ஒருத்தர் ஓய்வு அறிவிச்சாரு...' 'அதுக்குள்ள இன்னொருத்தரா...' 'அவர தோளில சுமந்து நடந்தது மறக்கவே முடியாது... நெகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரரான ஆல்ரவுண்டர் யூசுப் பதான், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான 38 வயது யூசுப் பதான், 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமார். இவர் 57 ஒருநாள், 22 டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 33 விக்கெட்டுகளும், டி20யில் 13 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் முக்கிய வீரராக குறிப்பிடப்படும் யூசுப் பதான், 2010-ல் மும்பைக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்தார். இவர் விளையாடிய 174 ஐபிஎல் போட்டியில் ஆட்டங்களில் 3204 ரன்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தன் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை புரிந்த யூசுப் பதான் ஓய்வு குறித்த அறிவிப்பில் சில முக்கியமான தருணங்களையும் கூறியுள்ளார்.
இந்தியாவுக்காக ஒருமுறை உலகக் கோப்பையை வென்றதும் சச்சின் டெண்டுல்கரை என் தோளில் தூக்கிச் சுமந்ததும் மறக்க முடியாத தருணங்களாக குறிப்பிடுள்ளார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் தோனி தலைமையிலும், ஐபிஎல் அறிமுகம் ஷேன் வார்னே தலைமையிலும், ரஞ்சி அறிமுகம் ஜகோப் மார்டின் தலைமையிலும் நிகழ்ந்ததாகவும் பெருமிததோடு கூறியுள்ளார்.
மேலும், 'கெளதம் கம்பீர் தலைமையில் கேகேஆர் அணியில் விளையாடி இருமுறை நாங்கள் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளோம். எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த என்னுடைய சகோதரர் இர்பான் பதானுக்கு நன்றி' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
I thank my family, friends, fans, teams, coaches and the whole country wholeheartedly for all the support and love. #retirement pic.twitter.com/usOzxer9CE
— Yusuf Pathan (@iamyusufpathan) February 26, 2021