VIDEO: ‘முடிஞ்சா தொட்டு பாரு’!.. கெத்தா நின்னு வீரர்களை மிரளவைத்த ‘முரட்டு’ காளை.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 5 நிமிடம் வீரர்கள் கையில் சிக்காமல் போக்கு காட்டிய காளையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அலங்காநல்லூரில் உள்ள முனியாண்டி கோவில் காளைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
A brave bull belongs to Karthikeyan unleashed in the #Alanganallur #Jallikattu arena for more than 5 minutes. It did not allow any tamers to touch him. @xpresstn @VinodhArulappan pic.twitter.com/WmbS0DKaUN
— jeyalakshmi (@jeyahirthi) January 16, 2021
இதனை அடுத்து வாடிவாசலில் இருந்து கோவில் காளை முதலில் சீறிப்பாய்ந்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் சுமார் 5 நிமிடமாக வீரர்களின் கையில் சிக்காமல் களத்தில் நின்று காளை ஒன்று போக்கு காட்டியது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
