'பப்ஜி விளையாடிட்டு இருந்தப்போ ஹார்ட் அட்டேக்கில் மரணம்...' 'வயசு வெறும் 15 தான்...' அப்பா,அம்மா ஏற்கனவே வார்ன் பண்ணிருக்காங்க...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 19, 2020 07:11 PM

ஈரோட்டில் நண்பர்களுடன் ஆன்லைனில் பப்ஜி விளையாடிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவன்  மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்து இறந்த செய்தி குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Pubg playing online with friends dies of heart attack

கருங்கல் பாளையம் கமலா நகரில் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 15 வயது சதிஷ் என்னும் சிறுவன் ஆன்லைனில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மேலும் விளையாடி கொண்டிருந்த அவர் தீடீரென மயங்கி விழுந்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமுள்ள சதிஷ், நேற்று மதியம் முதல் பப்ஜி கேமில் கவனம் செலுத்தி விளையாடி வந்துள்ளார். ஒரு சில முறை தோல்வி அடைந்ததால், அதை பற்றி தன் பெற்றோரிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. சதீஷை சமாதானம் செய்த பெற்றோர் பப்ஜி விளையாட்டு பற்றியும் எச்சரித்துள்ளனர்.

அதையெல்லாம் பொருட்படுத்தாத சதிஷ் இன்றும் தொடர்ந்து பப்ஜி கேம் விளையாடியுள்ளார். அப்போது தீடீரென மயங்கியுள்ளார். அதையடுத்து சதீஷை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவில் செய்த போலீசார், உடற்கூறு ஆய்விற்காக சதீஷின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.