“பெருமூளையில ஏற்பட்ட ரத்தக்கசிவு!”.. “பப்ஜி விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்”!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 21, 2020 10:47 AM

ஆன்லைன் விளையாட்டாகிய பப்ஜி கேம் பலரையும் தனக்கு அடிமையாக்கி, தன் மீதான போதையை விளையாடுபவருக்குள் உண்டாக்கி, அவர்களை தீவிர அடிமை மனநிலைக்குக் கொண்டு செல்வது அனைவராலும் அறியப்பட்டதுதான்.

25 year old dies in brain stroke due to PUBG addiction

Player Unknown’s Battle Grounds என்கிற இந்த ஆன்லைன் கேமின் சுருக்கமான வடிவமே PUBG(பப்ஜி). ஒரு ஸ்மார்ட்போனும், தங்கு தடையற்ற இணையவசதியுமே போதுமானதாக இருக்கிறது இந்த விளையாட்டினை விளையாடுவதற்கு. இந்த வசதிதான், தற்போது பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும்  கிடைக்கிறதே?

அதனால் பலரும் தொடர்ந்து இந்த விளையாட்டினை விளையாடத் தொடங்கினர். அடிக்‌ஷன் என்று ஒரு வார்த்தையில் சிம்பிளாக நாம் சொல்லிவிட்டு போய்க்கொண்டிருந்தோம். ஆனால் புனேவைச் சேர்ந்த ஹர்ஷல் மீமானே (Harshal Memane) என்கிற 25 இளைஞருக்கு இந்த பப்ஜி கேமினால் நடந்துள்ள துயரம் இந்தியத் துணைகண்டத்தையே அதிர வைத்துள்ளது.

25 வயது இளைஞரான ஹர்ஷல் மீமானே, தொடர்ந்து பப்ஜி கேம் விளையாடியதால் மூளை பக்கவாதத்தால் முதலில் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது,  intracerebral haemorrhage என்கிற பெருமூளை ரத்தக்கசிவு நோய்க்குறி இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன் பின்னர் அவருக்கு சிகிச்சை கொடுக்க முயன்றுள்ளனர்.

எனினும் சிகிச்சைப் பலனின்றி ஹர்ஷா உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் அவருடைய சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை ரிப்போர்ட், over-excited மற்றும் over-addictive ஆக பப்ஜி கேம் விளையாண்ட ஹர்ஷாவின் பெருமூளைக்குள் ஏற்பட்ட ரத்தக்கசிவினால், அவருடைய மூளைத்திசு மண்டலத்திற்குள் தாறுமாறான விகிதத்தில் ரத்தம் பாய்ந்ததே அவரின் மரணத்துக்குக் காரணம் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்குமான கேம் அப்ளிகேஷன்களை டெவலப் செய்யும் மென்பொருளாளர்கள், அவற்றில் நேர நிர்ணயம், வயது வரம்பு உள்ளிட்டவற்றினை உறுதிசெய்து, அடிக்‌ஷனுக்கு ஆளாக்காத வகையில் அவற்றை உருவாக்குவதன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர்களும், மருத்துவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : #PUBG #ADDICTION #BRAIN STROKE