'இவங்களும் கேம்ல மூழ்கினா என்ன செய்றது?'.. முக்கிய துறையில் பப்ஜி விளையாடுவதை கண்காணிக்க உத்தரவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | May 16, 2019 03:40 PM
சமீபத்தில் மாணவர்கள் தொடங்கி, இளைஞர்கள் வரையிலும் பலரும் அடிமையாவதாகக் கூறப்பட்ட கேம் பப்ஜி.
இந்திய பிரதமர் மோடியிடம், தன் மகன் எப்போதும் விளையாட்டிலேயே கவனமாக இருக்கிறான். அவனை என்ன செய்வது என்று ஒரு அம்மா கேட்டதற்கு, அவரோ ‘என்ன பய பப்ஜி விளையாடுகிறானா?’ என்று கேட்டு அதிரவைத்தார். அதிகம் பேர் அடிமையாவதாக எழுந்த புகாரின் பேரில் நேபாளத்தில் பப்ஜி கேமுக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டது.
அந்த அளவுக்கு நாடு முழுவதும் பிரபலமாகியுள்ள இந்த கேமை விளையாடுவதற்கு பலருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள் நிலையில், இம்முறை இந்திய துணைநிலை ராணுவ வீரர்களுக்கும் இந்த கேமை விளையாடுவதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே உள்ளிட்ட தளங்களில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
சிஆர்பிஎஃப் வீரர்களின் வேலைகளைப் பாதிக்கும் அளவுக்கு பப்ஜி கேம் அவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், வீரர்களின் செயல்திறனை இந்த கேம் பாதிப்பதாகவும், உடனிருக்கும் சக வீரர்களிடம் பேசிக்கொள்வது குறைவதாகவும், தூங்கும் பழக்கம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு உயர் அதிகாரிகள் பப்ஜி விளையாடும் வீரர்களைக் கண்காணிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.