‘நான் அவருகூடதான் வாழ்வேன் என்ன அவரோட சேர்த்து வையுங்க’!.. பப்ஜி விளையாட்டால் பெண் எடுத்த விபரீத முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 17, 2019 04:08 PM

பப்ஜி போதையால் கணவன், குழந்தையை விட்டு பிரிய விவகாரத்து கேட்டு குடும்பத் தலைவி ஒருவர் தொண்டு நிறுவனத்தை அணுகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pubg addict woman calls helpline to divorce to unite with pubg partner

ஆன்லைன் மொபைல் விளையாட்டான பப்ஜி மிகவும் பிரபலம். இதுவரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்தது இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், நடுத்தர ஆண்கள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், முதன்முதலாக பப்ஜி விளையாடி அதற்கு அடிமையானதோடு மட்டுமில்லாமல், பப்ஜி பார்டனரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், அதற்காக விவகாரத்து வேண்டும் என குஜராத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் தொண்டு நிறுவனத்திடம் உதவி கேட்டுள்ளார். இந்நிலையில், விவகாரத்து கோரிய பெண் தொடர்பாக அவருடைய பெற்றோர்கள், புகுந்த வீட்டார் மற்றும் கணவனிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் 18 வயது பூர்த்தியானவுடன் அந்த பெண்ணுக்கும், கட்டுமான தொழில் செய்து வரும் ஒருவருக்கும் திருமணம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த தம்பதிக்கு 8 மாத பெண் குழந்தையும் உள்ளது. குழந்தை பேறு அடைந்து அதற்காக ஓய்வு எடுத்து வந்த சூழலில் பப்ஜி விளையாட தொடங்கியுள்ளார் அந்த பெண். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக இருந்த பப்ஜி விளையாட்டு பிறகு வாடிக்கையாகி மாறிவிட்டது.

இந்நிலையில், அப்போது அதே நகரில் வசித்து வரும் ஒரு ஆண் நண்பர் பப்ஜி விளையாட்டில் அறிமுகமாகியுள்ளார். மேலும், அவருடன் நட்பு ஏற்பட, பப்ஜியில் தொடங்கிய பழக்கம் சேட்டிங், போனில் பேசுவது என அடுத்தக்கடத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, விபரீதத்தை உணர்ந்து கொண்ட தொண்டு நிறுவனத்தார், பாதிக்கப்பட்ட பெண்ணை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சில பயிற்சி எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும், பப்ஜி விளையாட்டால் பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு உளவியல் சார்ந்த சிகிச்சைகள் வழங்கப்படவும் குடும்பத்தினர் முயற்சிகளை தொடங்கியுள்ளனர்.

Tags : #GUJARAT #WOMAN #PUBG #GAME #WRONG DECISION