‘பெசன்ட் நகர் பீச்சில் மூழ்கிய ஐடிஐ மாணவர்கள்’! நண்பர்களுடன் குளிக்கும் போது நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 10, 2019 12:10 PM

பெசன்ட் நகர் கடலில் ஐடிஐ மாணவர்கள் இரண்டு பேர் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai ITI students drowning in Besant nagar beach

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஐடிஐ-யில்  சர்வேஸ்வரன் (18), ஆகாஷ் (18) ஆகிய இருவர்கள் முதலாமாண்டு படித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு நண்பர்களுடன் சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். அப்போது மாணவர்கள் அனைவரும் கடலில் குளித்துள்ளனர். அதில் எதிர்பாராதவிதமாக சர்வேஸ்வரன் மற்றும் ஆகாஷ் கடலில் மூழ்கியுள்ளனர்.

மேலும் இவர்களுடன் குளித்த மற்றொரு மாணவரான லோகேஷ் (17) கடலில் மூழ்கியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காணாமல் போன மற்ற இரு மாணவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Tags : #CRIME #COLLEGESTUDENTS #CHENNAI #DROWNING #ITI #BESANTNAGAR