‘வயிறு வலிக்காக சிறுமியை’... ‘மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு’... ‘காத்திருந்த பேரதிர்ச்சி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 15, 2020 07:47 AM

சேலம் அருகே 13 வயது சிறுமியை மிரட்டி, கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Police have arrested a college student for school girl\'s pregnancy

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புங்கவாடி கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளியின் 13 வயது நிரம்பிய மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் அதேப் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவர் நிரம்பிய மாணவர் ஒருவரும், கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே தெருவில் வசித்து வருவதால் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். மேலும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இதனை பக்கத்து வீட்டில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர், சிறுமியும், சிறுவனும் வீட்டில் தனிமையில் இருப்பதை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். இதையடுத்து, எனது ஆசைக்கு இணங்காவிட்டால், நடந்ததை உனது பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டியே அந்த சிறுமியை கல்லூரி மாணவரும் பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டு வந்துள்ளது.

இதையறிந்த மாணவியின் தாயார் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக உள்ளார் என தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளிடம் விசாரித்ததில் நடந்தைக் கூறி, மேலும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். பின்னர் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பொற்றோர் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மாணவி கொடுத்த வாக்கு மூலத்தின் படி, மகளிர் போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் ஹரிஹரன் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் சுபாஷ் என்ற மாணவன் உட்பட 2 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்லூரி மாணவர் ஹரிஹரனை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தலைமறைவாக உள்ள பள்ளி மாணவனை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும், இதுகுறித்து, மகளிர் போலீசார் கூறியதாவது, ‘மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமானவரை கண்டறிய, டி.என்.ஏ., பரிசோதனை செய்ய, மருத்துவ அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கர்ப்பத்துக்கு காரணமானவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்கும்’ என்று கூறினர்.