எதுக்குமே 'அடங்க' மாட்டுது... நெக்ஸ்ட் 'கொரோனா' நோயாளிகளுக்கு... இந்த 'மருந்த' தான் குடுக்க போறோம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | May 15, 2020 04:16 AM

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா உருமாறிக்கொண்டே இருப்பதால் தடுப்பூசி கண்டறிவது மிகுந்த சவாலாகவே உள்ளது.

India To Test 4 Ayurvedic Drugs For Coronavirus Within A Week

இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை அளித்து சோதனை செய்ய இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத் யெசோ நாயக் நேற்று தன்னுடைய ட்விட்டர் பதிவில், ''கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு நமது பாரம்பரியமிக்க மருத்துவ முறைவழிகாட்டும்,'' என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மத்திய அரசு ஆயுர்வேத முறையை பரிசோதனை செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.