யார் முதலிடம்! சிவில் சர்விஸ் இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | Apr 05, 2019 10:19 PM
2018 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான இறுதி முடிவுகளை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in-ல் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் சிவில் சர்வீஸ் தேர்வை யு.பி.எஸ்.சி நடத்தியது. இதையடுத்து நேர்காணல் மற்றும் பெர்சனாலட்டி தேர்வுகள் பிப்ரவரி - மார்ச் 2019ல் நடத்தப்பட்டன. இதில் 759 பேர் (577 ஆண்கள் + 182 பெண்கள்)தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகளில் கனிஷாக் கடாரியா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் ஐஐடி மும்பையில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். எஸ்.சி பிரிவைச் சேர்ந்த இவர், கணிதத்தை ஆப்ஷனல் பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்கிறார். மேலும், அக்ஷித் ஜெயின் மற்றும் ஜுனைத் அகமத் முறையே 2வது, 3வது இடங்களை பிடித்துள்ளனர்.
சிவில் சர்வீஸ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண்களில் ஸ்ருஷ்டி ஜெயந்த் தேஷ்முக் முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஒட்டுமொத்த தர வரிசையில் 5ஆம் இடம் பிடித்துள்ளார். இவர் போபாலில் உள்ள ராஜிவ் காந்தி ப்ரவுட்யோகிகி விஸ்வவித்யாலயா கல்லூரியில் பி.இ வேதியியல் பட்டம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் மத்திய அரசு பணிகளில் நியமிக்கப்பட உள்ளனர்.