12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? எந்த இணையதளத்தில் பார்க்கலாம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 17, 2019 11:09 AM

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்றும், எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

plus two exam results date and website announced

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, பாடவாரியாக மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தியாக முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்களின் முகவரிகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியை பயன்படுத்தி, மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாகவும், தேர்வு மையங்கள் மூலமாகவும் ஏப்ரல் 22 முதல் 24 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறுவதாக தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Tags : #STATEBOARDEXAM #PLUSTWO #RESULTS #EXAM #WEBSITE #DECLARES