‘2 ரூபாய்க்கு கொரோனா மருந்து’.. ‘தமிழக’ மருத்துவரின் கண்டுபிடிப்பை பரிசீலிக்க.. சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் 2 ரூபாய்க்கு கொரோனா மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,‘கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதுகுறித்து ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பி உள்ளேன். ஆனால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘மனுதாரர் கண்டுபிடித்துள்ள “பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்” என்ற மருந்து சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ், உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும். இந்த மருந்தின் விலை ரூ.2-க்கும் குறைவானதுதான். இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா அறிகுறி, காய்ச்சலாக மாறாமல் தடுக்கும். இந்த மருந்து ஏழை மக்களுக்கு பயனளிக்கும்’ என தெரிவித்தார்.
இதனை அடுத்து பேசிய நீதிபதிகள்,‘கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த ஆய்வு அறிக்கையை மனுதாரர் மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இந்த ஆய்வு அறிக்கையை பரிசீலித்து மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

மற்ற செய்திகள்
