இளம் மருமகளின் வாழ்க்கை குறித்த கவலை... கோவிலுக்கு அழைத்துச் சென்று மாலை மாற்றிக்கொண்ட 70 வயது மாமனார்.?
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேச மாநிலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் அவரது மாமனாரையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படும் செய்தி புகைப்படத்துடன் பரவி வருகிறது.

Also Read | "அவரை பத்தி யாருமே பெருசா பேசலயே".. இந்திய வீரருக்காக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆதங்கம்!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சபியா உம்ராவ் என்ற கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்கவராக சொல்லப்படும் கைலாஷ் யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.கைலாஷ் யாதவ் அங்கு அருகில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வாட்ச்மேனாக வேலை செய்து வருவதாக தெரிகிறது. அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை பார்த்துக்கொண்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில் கைலாஷ், தனது மூன்றாவது மகனுக்கு 28 வயதான பூஜா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். ஆனால் சமீபத்தில் பூஜாவின் கணவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் பூஜா தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. ஆனால் தனது அம்மா வீட்டில் சிறிது காலம் தங்கி இருந்த பூஜா, எவ்வளவு காலம்தான் தனியாக இருப்பார் என்று யோசித்த அவருடைய வீட்டில் இருந்தவர்கள் அவருக்கு அடுத்த திருமணம் செய்து வைப்பதற்கு யோசித்தனர்.
ஆனால் பெற்றோரின் இந்த யோசனைகள் பிடிக்காமல் மீண்டும் தன் கணவர் வீட்டுக்கு வந்து பூஜா வாழ தொடங்கியதாகவும், அப்போது அவருடைய எதிர்கால வாழ்க்கை குறித்து கைலாஷ் தீவிரமாக கவலை அடைந்து வந்ததாகவும் தெரிகிறது. மேலும் இது தொடர்பாக பூஜாவிடமும், உறவினர்களிடமும் கலந்து ஆலோசித்த கைலாஷ், பின்னர் இறுதியில் தன்னுடைய மருமகள் பூஜாவை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று, சுற்றம் மற்றும் கோவில் முன்னிலையில் பூஜாவுடன் மாலை மாற்றி திருமணமே செய்து கொண்டார்.
ஆம், அங்கு இருவரும் மாலை மாற்றிக் கொண்ட ஃபோட்டோ தான், இச்செய்தியுடன் பரவி வருகிறது. பிறகு பூஜாவின் நெற்றியில் கைலாஷ் குங்குமம் வைத்த புகைப்படங்களும் வைரலாகி பரவி வருகின்றன. இந்த திருமணத்தின் மூலம் பூஜா மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தரப்பிலும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இது குறித்து விசாரித்த போலீசாருக்கும் இருவரும் விருப்பப்பட்டே திருமணம் செய்து கொண்டனர் என்கிற தகவல் கிடைத்ததாக தெரிகிறது.
Also Read | எதே.? ஒரு கேஸ் 72 வருசமா நடந்துச்சா.!! இப்ப மட்டும் எப்படி முடிவுக்கு வந்தது.? சுவாரஸ்ய தகவல்.

மற்ற செய்திகள்
