திமுகவில் தங்க தமிழ்செல்வனுக்கு புதிய பதவி..! வெளியான அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 30, 2019 12:29 PM

திமுகவில் தங்க தமிழ்செல்வனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

New post for DMK candidate Thanga Thamizh Selvan

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கதமிழ்ச்செல்வனுக்கு கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திருச்சி சிவா மற்றும் ஆ.ராசா உடன் இணைந்து தங்கத்தமிழ்செல்வனும் கொள்கைப் பரப்பு செயலாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக அமுமுக கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் திமுக கலை இலக்கிய அணிச் செயலாளராக வி.பி.கலைராஜனும், திமுக நெசவாளர் அணிச் செயலாளராக கே.எம்.நாகராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : #DMK #THANGATHAMIZHSELVAN #POLITICS