'பதவியேற்பில் கெத்து காட்டிய 'கனிமொழி'... 'ஏன் அவங்க அப்படி கத்துனாங்க'? .... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 18, 2019 03:26 PM

நாடாளுமன்றத்தில் பதிவியேற்ற தமிழக எம்பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் ஏற்றனர்.பெரும்பாலான எம்பிக்கள் தமிழ் வாழ்க என கோஷமிட்டு நாடாளுமன்றத்தை அதிர வைத்தனர்.

Thoothukudi MP Kanimozhi takes oath as Lok Sabha MP

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதை அடுத்து பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட 313 பேர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் தமிழக எம்.பி.க்கள் இன்று பதவியேற்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் தமிழிலேயே பதவி ஏற்றுக் கொண்டார்கள். அதோடு தமிழ் வாழ்க,தமிழ்நாடு வாழ்க என தெரிவித்தனர்.

இதனிடையே தமிழக எம்பிக்கள் பதவி ஏற்கும் போது,தமிழ் வாழ்க என கூறிய போது எதிரே அமர்ந்திருந்த பாஜக எம்பிக்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என கூச்சலிட்டார்கள்.மேலும் 'பாரத் மாதாகி ஜே' என்ற கோஷங்களும் கேட்டன.இந்நிலையில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி பதவி பிரமாணம் செய்த பின்பு 'தமிழ் வாழ்க', பெரியார் வாழ்க என குறிப்பிட்டார்.அப்போது பாஜக எம்பிக்கள்  'ஜெய் ஸ்ரீராம்' என மீண்டும் கூச்சலிட்டனர்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.