'ஆமா திமுக குடும்பக் கட்சிதான்.. எங்களோட அடுத்த முக்கியமான பொறுப்பு..'.. உதய்நிதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jun 12, 2019 01:07 PM
திமுகவின் இளைய நம்பிக்கைச் சிறகாக இருக்கும் உதய்நிதி ஸ்டாலின், திமுகவின் பல்வேறு கட்சிக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு பேசி வருகிறார்.
அதன்படி, சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட உதய்நிதி ஸ்டாலின், அங்கு பேசும்போது, ‘எல்லாரும் எங்களை குடும்பக் கட்சி என்கிறார்கள். ஆமாம் நாங்கள் குடும்பக் கட்சிதான்.. கலைஞர் எனக்கும் தாத்தா பிற திமுக இளைஞர் படையினருக்கும் தாத்தா.. அன்பிலின் தாத்தா எனக்கு தாத்தாதான்.. இதுதான் எங்கள் குடும்பம்’ என்று கூறினார். அவரின் இந்த பேச்சுக்கு அவரது தொண்டர்களிடம் உற்சாகக் குரல்கள் எழுந்தன.
தொடர்ந்து பேசிய உதய்நிதி, பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தனக்கு புதிய பொறுப்புகளை அளிக்கவிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் கலைஞரின் பேரன், மு.க.ஸ்டாலினின் மகன், திமுகவின் கடைகோடி தொண்டனாக, “மு.க.ஸ்டாலின் எனும் நான்” என்று சொல்லும் அளவுக்கு திமுக தலைவரை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைப்பதுதான் நம் முதல் பொறுப்பு;வேலை என்று குறிப்பிட்டுள்ளார்.
எத்தனையோ தேர்தலில் வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்ததாகவும், தமிழ்நாடு முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்வதற்காக தலைமை தன்னை அனுமதித்துள்ளதாகவும் அப்போது மக்களவைத் தேர்தலில் எத்தனைத் தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள் என்று கேட்டதற்கு, தான் 35 தொகுதிகளை ஜெயித்துவிடுவோம் என்று கூறியதாகவும் கூறியுள்ளார்.