'உட்காருங்க முதல்ல'... 'உங்களுக்கு முதுகெலும்பு இல்ல'...அதிர வைத்த 'டி.ஆர்.பாலு'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 07, 2019 10:19 AM

முதுகெலும்பு உள்ளவர்களுக்காகவே மக்களவை இருப்பதாக, அதிமுக எம்பி ரவீந்திரநாத்தை, திமுக எம்பி டி.ஆர். பாலு விமர்சித்தார். அதன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது..

You have no backbone DMK MP TR Baalu criticize ADMK MP Raveendranath

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக எம்பி டி.ஆர். பாலு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து பேசி கொண்டிருந்தார். இந்த மசோதா குறித்து ஏன் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு தெரியப்படுத்தவில்லை என கடுமையாக பேசினார்.

இந்நிலையில் அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் டி.ஆர். பாலுவின் பேச்சில் குறுக்கிட முயற்சி செய்தார். அப்போது டி.ஆர்.பாலு சற்று ஆவேசமாக கையை நீட்டி ரவீந்திரநாத்தை அமரும்படி சமிக்ஞை செய்ததோடு, உங்களுக்கு முதுகெலும்பு இல்லை; அமருங்கள். இங்கே முதுகெலும்பு உள்ள நபர்களைத்தான் சபாநாயகர் பேச அனுமதித்தார் என்று கூறினார். உடனே கனிமொழி எம்.பி.யும் எழுந்து ரவீந்திரன் ஏன் குறுக்கிடுகிறார்? என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பேசிய பாலு, எனக்கு முதுகெலும்பு இருப்பதால் என்னை பேச அனுமதித்தீர்கள். சிலருக்கு முதுகெலும்பு இல்லை. அதனால் நான் அவர்களைப் பேசக் கூடாது என்றேன் என கூறினார். அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தை முதுகெலும்பில்லாதவர் என பாலு விமர்சித்தபோது திமுக எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி ஆராவாரம் செய்தனர்.

Tags : #DMK #AIADMK #KANIMOZHI #OPANNEERSELVAM #TR BAALU #MP RAVEENDRANATH