'கல்லூரி வரலாற்றிலேயே முதல் முறை'... சாதித்த 'சென்னை திருநங்கை'... வாழ்த்திய பிரபலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Jun 24, 2019 03:32 PM
சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற, திருநங்கை நளினா பிரசிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. திமுக எம்பி கனிமொழியும் தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருநங்கை ஒருவர் கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வென்றிருப்பது, கல்லூரி வரலாற்றிலேயே இது முதல் முறையாகும். சென்னை லயோலா கல்லூரியில் முதுகலை இரண்டாமாண்டு பயின்று வருபவர் திருநங்கை மாணவி நளினா பிரசிதா. இவர் கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது திருநங்கைகளுக்கு பெரும் உந்துதலாக இருக்கும் என பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
தனது வெற்றி குறித்து பேசிய அவர் '' இது மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவம். நான் சக மாணவர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறேன் என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது'' என தெரிவித்தார். இந்நிலையில் மாணவி நளினா பிரசிதாவிற்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. திமுக எம்பி கனிமொழி தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார்.
தனது பதிவில் ''சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.https://t.co/8FdKNhEhpg
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 24, 2019