‘அரசியலே வேண்டாம்’..‘என்னை யாரும் தொந்தரவு செய்யாதீங்க’.. ‘ஜெ. தீபா தீடீர் அறிவிப்பு’..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Jul 30, 2019 02:03 PM
முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அரசியலில் இருந்து விலகுவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பதிவில் எனக்கென்று குடும்பம் உள்ளது. அதுதான் எனக்கு முக்கியம். தீபா பேரவையைச் சொல்லி யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பேஸ்புக்கில் பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த பதிவு நீக்கபட்டது. இது தொண்டர்கள் கூறியதால் பதிவு நீக்கப்பட்டதா அல்லது வேறு யாரும் தீபாவின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Tags : #JDEEPA #POLITICS
