‘அப்பாடா ஒரு வழியா குடுத்துடாங்கப்பா... 72 வருஷம் கழிச்சு இப்பதான் கிடைச்சுருக்கு.. மகிழ்ச்சியில் கிராம மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 28, 2019 02:24 PM

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கிராமம் ஆன காணிக்குடியிருப்பு மற்றும் சின்னக்கல்லாறு கிராமங்களுக்கு சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முதலாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

village in hill area gets power facility first time after independence

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முண்டந்துறை வனச்சரகத்தில் அகஸ்தியர் காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பு, பெரிய மயிலாறு காணிக்குடியிருப்பு, இஞ்சிக்குளி, சேர்வலாறு காணிக்குடியிருப்பு உள்ளிட்ட மலைவாழ் பழங்குடி மக்கள் வாழும் குடியிருப்புகள் உள்ளது.

இந்நிலையில், சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட குடியிருப்புகளுக்கு மின்சார வசதி கிடையாது. மேலும், பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி இரண்டும் காரையாறு அணைக்கு மேல் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் அங்கு மின் இணைப்புக் கொடுக்க முடியாத நிலை உள்ளது. 

இதையடுத்து, இந்த கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அதில், 30க்கும் மேற்பட்டவர்கள், பள்ளி கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட காப்புக் காடு என்ற வகையில் வனத்துறையினர் மின் இணைப்பு கொடுக்க அனுமதி மறுத்துவந்தநிலையில், கிராம மக்கள் மின்சார இணைப்பு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வந்துள்ளனர்.

மேலும், மழை காலத்தில் குடியிருப்பு பகுதிக்கு செல்ல வழியின்றி கிராம மக்கள் தவித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு மின்வாரியத்தின் மூலம், சுமார் 109 பேருக்கு சூரிய மின்சாரக் கருவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வனத்துறையினர் மின் இணைப்பு கொடுக்க மின்வாரியத்திற்கு அனுமதி அளித்ததோடு மின் இணைப்பிற்கான முழு நிதி உதவியையும் வனத்துறையினரே வழங்கியுள்ளனர். இதையடுத்து, மின்வாரியத்தினர் சின்ன மயிலாறு பகுதிக்கு மின்சாரம் வழங்குவதற்கான பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர்.

மேலும், 48 குடியிருப்புகளுக்கும் ஒரு நீர் இறைக்கும் மோட்டாருக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீண்ட நாள்களாக மின்வசதி இல்லாத பழங்குடி மக்களுக்கு மின் இணைப்புக் கொடுக்கும் பணியை மேற்கொண்டது மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியுள்ளதாக மின்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : #TIRUNELVELI #WESTERNGHATS #VILLAGE #POWER FACILITY