லிமிட்டட் மீல்ஸ் '10 ரூபாய்'... அன் லிமிட்டட் மீல்ஸ் '30 ரூபாய்'... ஏ/சி வேற போட்ருக்காங்களாம்... 'ரஜினி ரசிகரின்' உழைப்பாளி உணவகம்... எங்கன்னு தெரியுமா...?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 11, 2020 12:21 PM

சென்னை சாலிகிராமத்தில் உள்ள உழைப்பாளி உணவகத்தில் ஒரு டீ குடிக்கும் செலவில் மதிய உணவை முடித்து விடலாம் என்பது தான் அப்பகுதி மக்களின் பேச்சாக உள்ளது.

The restaurant offers lunch for 10 rupees in Saligramam

எப்படி முடிகிறது. அளவுச் சாப்பாடு 10 ரூபாய். அளவில்லா சாப்பாடு 30 ரூபாய். இவ்வளவு குறைந்த விலையில் மதிய உணவு கொடுக்க முடிவதை பலராலும் நம்ப முடியவில்லை. குறைவான விலையில் சுகாதாரமான உணவு கிடைப்பதால் தொடங்கிய சில நாட்களிலேயே கூட்டம் அலைமோதுவதாக கூறுகின்றனர் சாலிகிராமவாசிகள்.

மேலும் இந்த உணவகத்தில் ஏசி வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.  அந்த அறையில் அமர்வதற்கு என்று தனிக் கட்டணம் எதுவும் இல்லை. விருப்பப்பட்டால் காற்றோட்டமாக திறந்த வெளியில் நல்ல நிழலில் போடப்பட்டிருக்கும் மேசைகளிலும் அமர்ந்து கொள்ளலாம்.

சாலிகிராமம், வடபழனி, வளசரவாக்கம், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் வசிக்கும் சினிமா துறையை சார்ந்தவர்களுக்கு இந்த உணவகம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். பலரும் குறைந்த செலவில் தங்களது பசியை போக்கிக் கொள்கின்றனர்.

தீவிர ரஜினி ரசிகரான இந்த உணவகத்தின் உரிமையாளர் வீரபாபு, லாப நோக்கில் மட்டும் இந்த உணவகத்தை நடத்தவில்லை எனக் கூறுகிறார். காலையும், மாலையும் கிடைக்கும் வருமானத்தில் மதியம் ஏற்படும் இழப்பை சரி செய்துகொள்வதாக அவர் கூறுகிறார்.

மணப்பாக்கத்தில் ஏற்கனவே இந்த உணவகத்தின் முதல் கிளை தொடங்கப்பட்ட நிலையில் தற்போது சாலிகிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

Tags : #RAJINIKANTH #RAJINIKANTH #VEERABHABU #SALIGRAMAM #RESTAURANT