'ஏப்ரலில் சிறப்பான தரமான சம்பவங்கள்?!'... ரஜினியின் 'அரசியல் தர்பார்'... கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 09, 2020 03:53 PM

நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

sources say rajini to announce his party after tamil new year

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி, தான் புதிய கட்சி தொடங்கி தமிழத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். அரசியல் அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்த செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தினத்திற்குப் பின்னர் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், செப்டம்பர் மாதம் முதல் நடிகர் ரஜினி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் கொள்கை மற்றும் திட்டங்களை மக்களிடம் விளக்கி கூற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : #RAJINIKANTH #POLITICS #PARTY #LAUNCH