'தமிழ்ப்புத்தாண்டில் உங்களுக்கு 'சர்ப்ரைஸ்' இருக்கு'... ரஜினியின் சகோதரர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 27, 2020 12:38 PM

ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழ்ப்புத்தாண்டில் தெரிவிப்பார் என்றும் மற்றும் கூட்டணி குறித்தும் தெரிவிப்பார் என, சத்யநாராயண ராவ் கூறியுள்ளார்.

On Tamil new year Rajinikanth will announce his party details

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி திருமணத்தில் கலந்து கொண்ட சத்யநாராயண ராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், ''ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழ்ப்புத்தாண்டில் தெரிவிப்பார். கட்சி, கூட்டணி உள்ளிட்ட கட்சி தொடர்பான அனைத்து தகவல்களையும் அவரே அறிவிப்பார்'' என கூறினார்.

மேலும் பேசிய சத்யநாராயண ராவ், ''கட்சி தொடங்குவதற்கு முன்பாக எங்களது சொந்த கிராமமான வேப்பனஹள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பத்திற்கு அவர் நிச்சயம் வந்து செல்வார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. டெல்லியில் நடந்த கலவரம் மிகவும் கண்டனத்துக்குரியது. எதிர்கட்சிகள் அல்லது யாருடைய தூண்டுதல் பேரிலோ இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன'' என கூறினார்.

Tags : #RAJINIKANTH #SATHYANARAYANA RAO