இந்திய அணியின் ‘பிரபல முன்னாள் வீரர் திடீர் மரணம்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Aug 15, 2019 11:35 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் (57) சென்னையில் காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் தமிழ்நாடு அணி கேப்டனாகவும் இருந்துள்ளார்.
1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக விளையாடிய இவர் கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் இந்திய அணியின் தேர்வு குழு தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் தமிழக ரஞ்சி அணியின் பயிற்சியாளராகவும் பதவி வகித்துள்ளார்.
Tags : #CRICKET #TEAMINDIA #FORMER #CRICKETER #RIP #TAMILNADU #VBCHANDRASEKHAR
