தமிழக பாடிபில்டர் பாஸ்கரனுக்கு ‘அர்ஜுனா விருது’.. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 29, 2019 08:09 PM

தமிழக பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

National sports awards the ceremony at the Rashtrapati Bhawan

டெல்லியில் விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கி கவுரவிக்கிறார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. மேலும் விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

அதேபோல் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக்கிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

Tags : #BHASKARAN #ARJUNAAWARD #TAMILNADU #BODYBUILDING #RAMNATHKOVIND #PRESIDENT