'நான் இருக்கேன்மா மகனா..'.. கைவிட்ட கணவன்.. மகனை இழந்த தாய்.. ஆனாலும் சோமாலியாவில் இருந்து வந்த குரல்.. நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Aug 15, 2019 07:48 PM
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். 27 வயதேயான சண்முகத்துக்கு 19 வயதில் ஒரு மனைவியும், 10 மாத குழந்தையும் இருக்கும் நிலையில், அவர் கடுமையான சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சண்முகத்தின் தாய் லட்சுமியை விட்டுவிட்டு, சண்முகத்தின் தந்தை பிரிந்து சென்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வரும் நிலையில், சண்முகத்தின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்துள்ளது அவரது குடும்பம். இந்த நிலையை விகடன் கட்டுரையாக வெளியிட, தன்னார்வத்துடன் சாதிக் அலி என்பவர் முன்வந்து மருத்துவமனையில் சேர்த்து உதவினார். முகநூலிலும் இதுபற்றி பதிவிட, சாதிக் அலியின் சோமாலியா நண்பர் முகமது உசேன், போன் செய்து என்ன பிரச்சனை என விசாரித்துள்ளார்.
உடனே, உசேன், சண்முகத்தின் அம்மாவிடம், ‘கவலைப் படாதீர்கள். நாங்கள் எங்கள் தர்காவில் பிரார்த்திக்கிறோம். உங்கள் மகன் மீண்டு வருவார்’ என ஆறுதல் கூறி, 3800 ரூபாய் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி சண்முகம் இறந்ததைக் கேட்டு உசேன் உருகியதோடு, ‘அல்லா அவரை தன்னுடன் எடுத்துக்கொண்டுவிட்டார் போலும், நான் இருக்கிறேன் உங்களுக்கு மகனாக, வேண்டியதை நான் செய்கிறேன்’ என சாதிக் அலி மூலமாக உசேன் சண்முகத்தின் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்.
ஆனால் சண்முகத்தின் அப்போவோ, இப்போது லட்சுமி இருக்கும், தனக்கு சொந்தமான வீட்டை காலி செய்யவில்லை என்றால் ஜேசிபி வைத்து இடித்துவிடுவேன் என்று கூறியுள்ளார். சொந்த உறவுகளே கைவிட, அந்நிய தேசத்து உசேன் இப்படி ஆறுதலாக பேசியுள்ளது நெகிழ்வைத் தந்திருக்கிறது.